சென்னை: ‘தகுதியற்ற மாணவர்களுக்கு, இலவச, ‘லேப்டாப்’ வழங்கிய வகையில், தமிழக அரசு, 242 கோடி ரூபாய் முறையற்ற செலவு செய்துள்ளது’ என சமீபத்தில் மத்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. ‘அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு, இலவச, லேப்டாப் வழங்குவதை தவிர்த்திருக்கலாம்’ எனவும் இதனால் தகுதியற்ற மாணவர்களுக்கு, 242 கோடி ரூபாய் மதிப்பில், 1.61 லட்சம், லேப்டாப் வழங்கப் பட்டுள்ளது என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு. உள்ளது.

இந்த செய்தியை மறுத்து பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: அம்மாவின் செல்லக் குழந்தைகளை தகுதியற்ற மாணவர்கள் என்று எப்படிக் கூறலாம்? நமது மாணவ கண்மணிகள் லேப்டாப் இல்லாவிட்டால் எப்படி திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து புரட்சித் தலைவர் எம்ஜியாரும் புரட்சித் தலைவி அம்மாவும் நடித்த திரைப்படங்களைப் பார்ப்பார்கள், பேஸ்புக் டுவிட்டர் என வகுப்பறையில் அமர்ந்த்து கொண்டே எப்படி தங்கள் நண்பர்களுடன் நட்பு பாராட்டுவார்கள். குறிப்பாக எப்படி பெண் நண்பிகளுடன் கடலை போடுவார்கள்.jaya phone இளைஞர்களையும், மாணவர்களையும் நாசமாக்கும் புதிய திரைப்படங்கள் பார்க்காமல் எப்படி பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவார்கள். மேற்கொண்டு அம்மாவின் அமைதிப் பூங்கா ஆட்சியில் ஒருதலை காதல் தோல்வி அடைந்து பெண்களை வெட்டிச் சாய்க்கும் கூட்டத்திற்கு பேஸ் புக்கில் காமெண்ட் எழுதவும் நமது இளைஞர்களுக்கு மொபைல் போனும், இலவச இன்டர்நெட்டும் தேவைப்படுகிறது, காதலிலும், தேர்வில் தோல்வியுறும் மாணவர்களும், இளைஞர்களும் சுலபமாக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள விலையில்லா தூக்கு கயிறு, விலையில்லா தூக்க மத்திரை, சவப்பெட்டி, கட்டணமில்லா திவசம் போன்றவைகளுக்கும் அரசு ஆவன செய்து திட்டங்களை வகுக்கும். படிப்படியாக மாணவர்கள் அல்லாதவர்களுக்கும் இந்த விலையில்லாத திட்டங்கள் விரிவு படுத்தப்படும் என்றார்.

இது குறித்து இன்னொரு அடிமை அமைச்சர் கூறுகையில், அம்மாவில் கற்கால ஆட்சியில் வெளியிடப்படும் ஆவணப்படங்களை லேப்டாப்பில் பார்க்கும் வசதி செய்யப்படும். இதன் மூலம் பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்கு வரும் மாணவச்செல்வங்களை எங்கள் கழகக் கண்மணிகளாக மாற்றுவதே அம்மாவின் ரகசிய ஆணை. சென்ற வாரம் கூட “வாட்சப் இல்லாமல் வருத்தப்பட்டு ஒரு மாணவன் முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளான். அவன் கோரிக்கையை ஏற்று தேர்தல் அறிக்கையில் கூறிய படி விரைவில் அம்மா ‘ஆப்’ புடன் அம்மா மொபைல் மற்றும் இலவச ரிலையன்ஸ் ஜியோ இன்டர்நெட்டும் வழங்க உள்ளோம் என்று உற்சாகமாக கூறினார்.