concept Credit: Sekar Palanisamy

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆரம்பித்து, அவ்வப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரஜினி விரும்பினால் தனது கட்சியில் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபகாலமாக கமல்ஹாசன் தமிழக அரசியலை பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். டுவிட்டர் மூலம் அரசியலுக்கு வந்து விட்டேன் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் கமல் தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியுடன் அரசியல் பேசத் தயார் என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் பாஜக ஆதரவு காமெடி கிங் எஸ்.வி.சேகர் கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒத்து ஊதினார். சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல், மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சகட்டம் போராட்டம். நான் தொழிலுக்காக நடிக்கிறேன், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர் என்றும் கமல் குறிப்பிட்டார்.அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தொடங்குவதாக கூறியிருந்தார். அக்டோபர் 2-ம் தேதி கமல், அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. கமல் தற்போது பேசியிருப்பதன்மூலம், அந்த செய்தி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கப்சா நிருபரிடம் சிறப்பு பேட்டி அளித்தார்: “திருட்டு ரயில் ஏறி வந்து திக்கெட்டும் சொத்து சேர்த்து வைத்துள்ள திருக்குவளையார், எனக்கு கலைஞானி பட்டம் கொடுத்த கருணாநிதி மூன்று பொண்டாட்டிகளுக்கு சொந்தக்காரர். நானும் வாணி, சரிகா, லிவிங்டுகெதர் கவுதமி என்று மூன்று பொண்டாட்டிகளுக்கு சொந்தக்காரன். இது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என திடமாக நம்புகிறேன். கருணாநிதி தொண்டனுக்கு எழுதிய கடிதத்தின் நிகழ்கால வடிவம் தான் என் தற்கால ட்வீட்டுகள். ரஜினி அதுக்கெல்லாம் லாயக்குப் படமாட்டார். அவருக்கு ஒன்னு தான். அதுதான் இறங்க பயப்படுறார். வேண்டும் என்றால் என் கட்சியில் கொ.ப.செ பதவி கொடுப்பேன். முதல்கட்டமாக எனது ட்விட்டர் கட்சியில் ரஜினியை இணைத்து, அவருக்கு என்னுடையது போலவே #irajinikanth என்ற ட்விட்டர் ஹேண்டிலை ஆரம்பித்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன். எந்த புது டெக்னாலஜி வந்தாலும் அதை கிரகித்துக் கொண்டு படமெடுப்பது போல் திரைத்துறையைப் போலவே 2ஜி யை மிஞ்சும் வகையில் ரஜினிஜியை இணைத்துக் கொண்டு புது ட்ரெண்டுக்கு ஏற்ப 4ஜி 5ஜி என்று ஊழலில் உலகநாயகனாக விஸ்வரூபம் எடுப்பேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet