சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் குழந்தைகள் அணி தலைவரான ராகுல் காந்தி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராகுல் காந்தியிடம் அவரது தந்தையும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய ராகுல் காந்தி, “பல ஆண்டுகளாக நானும், என்னுடைய சகோதரியும் கோபத்துடன் கூடிய மனவேதனையில் சிக்கியிருந்தோம். ஆனால், தற்போது அவர்களை முழுவதுமாக மன்னித்து விட்டோம்” என்று கூறியதாக இந்தியாவின் முன்னணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தனது தந்தை மட்டுமல்லாமல் தனது பாட்டியும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்கும், அவர்கள் அரசியலில் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுத்ததே காரணமென்றும், தாங்கள் கொல்லப்படுவோம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர் என்றும் அவர் கூறியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகுல்காந்தியின் மன்னிப்பு அறிவிப்பு, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களின் விடுதலை கோரிக்கைகள் தொடர்பில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா என்று கேட்டபோது, பிபிசியிடம் பேசிய திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, ராகுல் காந்தியின் கருத்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை அதிகரிப்பதாகத் தெரிவித்தார். “ராஜிவ் காந்தியின் குடும்பத்தினரே ஒருவர் பின் ஒருவராக வெளிப்படுத்தும் எண்ணங்களை மத்திய, மாநில அரசுகள் கருத்திற்கொண்டு 27 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார். “ஏற்கனவே இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான கருத்தை சோனியா காந்தி வெளிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது தானும், தன்னுடைய சகோதரி பிரியங்காவும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளது அரசியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார். அரசியலில் நாம் தவறான சக்திகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட்டு, அதற்கு துணையாக இருந்தால், நிச்சயம் கொல்லப்படுவோம். இது தெளிவாக தெரிந்துவிட்டது. எனக்கும் என் சகோதரிக்கும் அரசியலை விட்டால் வேறு பிழைப்பு இல்லை. இனி வேறு வேலைக்கு எல்லாம் போக முடியாது. தமிழகத்தில் நாங்கள் கூட்டணி வைத்த திராவிட கட்சிகள், இன்றைக்கோ நாளைக்கோ என இழுத்துக் கொண்டு, ஐசியூ வில் இருக்கும் நிலையில் உள்ளன.
எனவே நாளைக்கு சாகப் போகிற கிழவி போன்ற திராவிட கட்சிகளை காப்பாற்றவும், மேலும் அரசியலில் உள்ள புது போட்டிகளைச் சாமாளித்து மீண்டும் ஆட்சித் தொட்டிலில் பப்புவாகிய நான், புட்டிப்பால் குடிக்கவும், என் தந்தையை கொலை செய்த குற்றத்தில் சிறையில் இருக்கும் 7 குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக முதல்வரும் மறைந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு முடிவு செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனால், என்னுடைய சொந்த கருத்தை கூறுங்கள் என்றார்கள். நான் இதில் கூற முடியாது என மறுத்து, இது அரசின் முடிவு என்று தெரிவித்தேன். என் தந்தை கொல்லப்பட்டதை நினைத்து நானும், பிரியங்காவும் பல ஆண்டுகள் மனதுக்குள் வேதனையில் துடித்தோம். ஆனால், இப்போது, என் தந்தையை கொலை செய்தவர்களை நானும், பிரியாங்காவும் முழுமையாக மன்னித்துவிட்டோம் (சொல்லும்போது ஸ்சூல் பையன் போல் கண்கலங்கினார்)
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
பகிர்