கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா கட்சி 104. மதசார்பற்ற ஜனதாதளம் ஆதரவுடன் காங்கிரஸ் அணி 115. ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. முதல்-மந்திரி சித்த ராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த கர்நாடக சட்ட சபையின் பதவிக் காலம் வருகிற 28-ந் தேதியுடன் முடிகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூரமாக வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதாவும், அதே சமயம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமையக்கூடாது என்ற நோக்கத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு வழங்க முன்வந்து இருப்பதால், புதிய ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா யாரை அழைப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் குமாரசாமியும், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட வாக்குப் பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் சொன்னபடியே நிகழ்ந்திருக்கின்றன. அதாவது தொங்கு சட்டசபை அமையும், மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக இருக்கும் என்பதை தான் பெரும்பாலானோர் கணித்திருந்தனர். ஆனால், அந்த கணிப்பில் மிகப்பெரிய மாற்றமாக மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் அளவிற்கு முடிவுகள் வித்திட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மஜத உடன் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. சுயேட்சை வேட்பாளர் ஒருவரும், கர்நாடக பிரக்ஞவந்த ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவரும்& வெற்றி பெற்றுள்ளனர். எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கர்நாடக தேர்தலில் முல்பகல் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் நாகேஷ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைவதற்கு காங்கிரஸ் நிபந்தனையின்றி ஆதரவு அளித்துள்ளது. இதனையடுத்து, பாஜகவும், காங்கிரஸ்-மஜதவும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன. தங்களுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க ஆளுநர் ஒப்புக் கொண்டுள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆளுநர் முதலில் யாரை ஆட்சி அமைக்க அழைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் ஆளுநருக்கு இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, பாஜக தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியபடி எஸ்.ஆர்.பொம்மி தீர்ப்பு படி தேர்தலில் அதிக இடங்களில் கைப்பற்றிய பாஜகவை முதலில் ஆட்சி அமைக்க அழைக்கலாம். அவர்களுக்கு கொடுக்கப்படும் கால அவகாசத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் அடுத்த இடத்தில் உள்ள கட்சியை அழைக்கலாம். அப்படியில்லை என்றால், கோவா, மணிப்பூர் தேர்தல்களின் போது நடந்ததைப் போல், கூட்டணியில் அதிக பலம் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம். காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் தற்போது வரை உள்ளது. ஆட்சி அமைக்க தற்போது 112 இடங்கள் மட்டும் இருந்தால் போதும். இருப்பினும், எந்த முடிவையும் எடுப்பதற்கு ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நேரத்தில் தான் ஆளுநர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு முடிவு எடுக்க முடியும். இதில் மற்றொரு விஷயம் என்ன வென்றால், யாரை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்பதை முடிவு செய்யவும் ஆளுநர் நேரம் எடுத்துக் கொள்ளலாம். இதுவரை ஆளுநர் எவ்வித அறிவிப்பையும் எடுக்கவில்லை. ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதேபோல், பாஜகவிடம் இருந்து தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி முயற்சிக்கும். அதனால், குஜராத் எம்.எல்.ஏக்களை பெங்களூர் அருகே ரிசாட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தது போல், தற்போதும் நடக்க வாய்ப்புள்ளது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை ஆந்திரா, பஞ்சாப் மாநில ரெசார்ட்டுகளில் தங்க வைக்க திட்டம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏ-க்கள் தங்களது விருந்தினர் மாளிகைக்கு வருகை தரலாம் என கேரள சுற்றுலாத் துறை அழைப்பு விடுக்கும் வகையில் சூசகமாக கிண்டல் அடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வெற்றிபெற்றுள்ள எம்எல்ஏ-க்களை குதிரை பேரம் பேசி, அணிமாறச் செய்யும் நிலை ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. அதற்கு குடி குட்டி சகிதம் ஒரு இடம் தேவைப்படுகிறது. கடந்த கால தமிழக அரசியலில் சின்னம்மாவின் கூவத்தூர் நிகழ்வை கருத்தில் கொண்டு கேரள சுற்றுலாத் துறை தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள எம்எல்ஏ-க்களுக்கு என பிரத்யெக ரிசார்ட்டுகள் தயாராக உள்ளது. கடவுளின் சொந்த தேசத்தில் பாதுகாப்பான இன்பச்சுற்றுலா அனுபவிக்க வருகை தரவேண்டும் கருத்து ஒன்றை பதிவிட்டு சூசகமாக கிண்டல் செய்துள்ளது. ஜெயலலிதா மறைந்தவுடன் ஓபிஎஸ் மற்றும் திமுகவிடம் இருந்து தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள கூவத்தூரில் சசிகலா தரப்பு சிறை வைத்தது. அந்த பார்முலாவை காங்கிரஸ் கட்சியும் மாநிலங்களவை தேர்தலின்போது அமித்ஷா- அகமது பட்டேல் இடையே போட்டி நிலவியபோது செய்தது. குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவின் புள்ளைபுடிப்பதில் இருந்து காத்து பத்திரப்படுத்தும் பொறுப்பு மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. அதன்படி இந்த முறையும் கர்நாடக எம்எல்ஏக்களை ஈகிள்டன் ரிசார்டில் வைத்து பாதுகாக்கும் பணியை இவரே ஏற்பார் என்று தெரிகிறது. இந்த பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவிட்டது. இதற்கிடையே, கேரள சுற்றுலாத் துறை தனது சர்ச்சைக்குறிய பதிவை நீக்கியது. கப்சா தகவலின்படி கூவத்தூர் பார்முலாபடி எப்படி எம்.எல்.ஏக்களை கட்டுக்குள் வைப்பது என பரப்பன அக்ர்ஹாராவில் உள்ள கொரில்லா செல்லில் சின்னம்மாவும், எடியூரப்பாவும் ரகசிய சந்திப்பு நிகழ்த்தியதாக நம்பத்தகாத சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார். திமுகவிற்கு ஒரு திருமங்கலம் பார்முலா போல் அடிமைகள் திமுகவிற்கு ஒரு கூவத்தூர் அழியாப் புகழை தேடித்தந்து விட்டது.

பகிர்