சென்னை வெள்ளம் மற்றும் எறும்பு ஒப்பீடு: நாஞ்சில் சம்பத்திற்கு காங்கிரஸ் அழைப்பு

230

புது டெல்லி: தமிழக அரசியலில் ஓர் புது திருப்பமாக அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத்திற்கு தேசிய கொள்கை பரப்பு செயலாளராக இணைய காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது பற்றி கூறப்படுவதாவது: அன்னை இந்திரா இறந்தபோது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கருத்து சொல்லும்போது “பெரிய மரம் சாயும் பொது கொஞ்சம் அதிர்ச்சி இருக்கத்தான் செய்யும்” (When a big tree falls, the earth is bound to shake a little) என்றார்.rajive

இப்போது “எறும்புகள் சாகின்றன என்பதற்காக யானைகள் நடக்காமல் இருக்க முடியுமா?” என்று சென்னை மக்களையும் ஜெயலலிதாவையும் நாஞ்சில் சம்பத் ஒப்பிட்டு கருத்து சொல்லியிருப்பது அவருக்குள் இருக்கும் அடிமை புத்தியையும் தேச பக்தியையும் வெளிகொணர்ந்திருக்கிறது. இது மாதிரியான ஆட்கள் தான் காங்கிரசிற்கு தேவை. அதனால் நாஞ்சில் சம்பத்திற்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது என்று ஒரு காங்கிரஸ் தொண்டர் கூறினார்.

There are no comments yet