ஆப்கானிஸ்தானில் குடியேறும் முடிவை கமல் கைவிட்டார்

262
சென்னை: இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாலும், சென்னை வெள்ள பிரச்சினையில் அமைச்சர் பன்னிர்செல்வம் ‘கருத்து கந்தசாமி’ விமர்சித்ததாலும்  தமிழ்நாட்டை விட்டு வெளியேற நடிகர் கமல் முன்னதாக முடிவு செய்திருந்தார் என தகவல்கள் வெளியான நிலையில், இன்று அந்த செய்திகளை மறுத்து அறிக்கை விட்டார்.
viswaroopam-kamal
மேலும் அந்த அறிக்கையில் கமல் கூறியிருந்ததாவது:  ஆப்கானிஸ்தானில் குடியேறும் எண்ணம் இப்போது கிடையாது. என் சில படங்களை இன்னும் தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதிலிருந்தே நம் தமிழர்களுக்கு எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கிறது என்பது தெரியும்.  அமைச்சர் பன்னிர்செல்வம் எனக்கு அண்ணன் மாதிரி, அவர் எனக்கு அறிவுரை சொன்னதாக நினைக்கிறேன். இனி தமிழ்நாட்டை விட்டு போவதாக இருந்தால்   இந்தியாவிலேயே சகிப்புத்தன்மை மிக்க கட்சியான சிவா சேனா இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்வேன் என்றார்.

There are no comments yet