அடுத்த முதல்வர் சிம்பு : வைகோவின் புதிய கூட்டணி முயற்சி

438
சென்னை: விஜயகாந்தின் ‘நிலையில்லாத’ நிலையினால் மனம் உடைந்த வைகோ, சிம்புவுடன் கூட்டணிக்கு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கேப்டன்  ‘துப்பு ‘வை பல அரசியல்  கட்சிகளும் கூட்டணிக்கு இழுக்க முயல்வதால் அவரின் கால்சிட் டிமாண்டாக உள்ளது. பாஜக, திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விஜயகாந்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் வைகோ தனது மக்கள் நல கூட்டணிக்கு மாற்று நடிகரை புக் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இது குறித்து வைகோவின் தாயகத்தில் உலவி வரும் தகவல் வருமாறு: விஜயகாந்தின் அடாவடி பேச்சும், ஆணவ போக்கும் வைகோவுக்கு பிடிக்கவில்லை. பெரியார், அண்ணா காட்டிய திராவிட பாரம்பரியத்தில் வந்த வைகோ விஜயகாந்தின் வாசலில் போய் கெஞ்சி நிற்பது மதிமுக தொண்டர்களுக்கு இழுக்கு என வைகோ நினைக்கிறார். ஆகவே  வரும் தேர்தலில் சிம்புவோடு கூட்டணி வைப்பது என்றும் முடிவு எடுத்துள்ளோம்.
 
‘பீப்’ பாடல் சர்ச்சைக்கு பிறகு சிம்பு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் பிரபலம் ஆகி இருக்கிறார். பெண்களை இழிவாக பாடியதும், போலீசிற்கு டிமிக்கி கொடுப்பதும் அவருக்குள்  இருக்கும் உண்மையான அரசியல் வியாதியை அடையாளம் காட்டியிருகிறது. அது மற்றுமல்லாது சிம்பு குடும்பமே தமிழ்நாட்டில் ‘பெயர்’ போனது. எனவே வைகோ அண்ணன் ‘நாளைய நாயகன்’  சிம்புவுடன் கூட்டணி அமைத்து சிம்புவை முதல்வராக்க முடிவு செய்துள்ளார். simbu
 
இது பற்றி கேள்விப்பட்ட மற்ற மக்கள் நல இயக்க தலைவர்கள் அதிச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. தோழர் நல்லக்கண்ணு கூறும்போது ‘சிம்புவுக்கு அனுபவம் போதாது. ஒரே ஒரு ‘பீப்’ பாடல் தான் பாடியிருக்கிறார். இதுக்கு பதில் காங்கிரசோட சேர்ந்து குஷ்பு, நக்மா  தலைமையில் தேர்தலை சந்திப்பது நல்லது. அதுதான் ஜெயா, கருணாநிதி, விஜயகாந்திற்கு நல்ல மாற்றாக அமையும்’ என்றார். 
பகிர்

There are no comments yet