சென்னை: கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி கடை பிடித்த யுக்திகளை பின்பற்றி எப்படியும் இந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் நாற்காலியை கைப்பற்ற விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து தேமுதிக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுவதாவது: கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் ‘சாய் பே சர்ச்சா’ (டீ மேல் விவாதம்) என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி கோடிக்கணக்கான வாக்களர்களுடன் நேரடி நிகழ்வாக பல்வேறு பிரச்சினைகளை விவாதித்தார். இந்த யுக்தியை கடைபிடித்து வாக்களர்களை கவர தேமுதிகவும் விரும்புகிறது. டீ கடைகளுக்கு பதிலாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஒரு பெயர் சொல்ல விரும்பாத தொண்டர் கூறும்போது: மோடிஜிக்கு சாய் (டீ) ரெம்ப பிடிக்கும், எங்க கேப்டனுக்கு சரக்கு ரெம்ப பிடிக்கும் அதுனால நாங்க டாஸ்மாக்ல கூட்டம் போடுறதா இருக்கோம். இந்த நிகழ்ச்சிக்கு ‘லிக்கர் பெ சக்கர் (சாராய மயக்கம்) அல்லது ‘குவார்டர் உள்ளே மேட்டர்’ என்று பெயரிட இருக்கிறோம். கேப்டன் பேச்சை கேக்க விரும்பாட்டியும் அட்லீஸ்ட் சரக்குக்காக கூட்டம் வரும் அதுவே எங்களுக்கு வெற்றி என்றார்.
There are no comments yet
Or use one of these social networks