நாஞ்சில் சம்பத் விவகாரம்: டிவி கலந்துரையாடல் அதிமுக பிரமுகர்களுக்கு ஹாட் லைன் வசதி- மேலிடம் முடிவு

566

சென்னை: இனிமேல் பல்வேறு டிவிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில்பங்கு பெரும் அதிமுக பிரமுகர்கள் முதல்வர் ஜெயலலிதாவை ஹாட் லைன் மூலம் நேரடியாக தொடர்புகொண்டு கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று தம்மை அறிவுரை கேட்க என அதிமுக தலைமை விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றி மேலும் கூறப்படுவதாவது – சமீபத்தில் ஒரு தனியார் டிவிக்கு பேட்டி கொடுக்கும்போது அதிமுக தலைமைக்கு ஒவ்வாத கருத்துக்களை சொல்லி பல்பு வாங்கி சர்ச்சையில் மாட்டிக்கொண்டதால் இனிமேல் டிவி நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் அனைத்து அதிமுக பிரமுகர்களும் ஒவ்வொரு கேள்விக்கும் மேலிடத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பதில்களை பெற்று பிறகு அதை டிவி நிருபர்களுகு தெரிவிக்கும் வகையில் ஹாட் லைன் தொடர்பு வசதி கொடுக்க அதிமுக தலைமை யோசித்துள்ளது.800px-ChennaiAIADMK_1762

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பிய அம்மா தொண்டர் கூறியதாவது: எங்களுக்கு அம்மாதான் எல்லாமே. அதனால் எதுக்கு வம்பு, பேசாம கேள்விகளை முதல்லேயே அம்மாவுக்கு அனுப்பி, பதில் வந்த பின்னாடிதான் டிவி பேட்டிக்கே ஒத்துக்கணும், இல்லாட்டி சம்பத் மாதிரி தான் ஆக வேண்டி இருக்கும் என்றார்.

மேலும் அதிமுக தலைமை Frequently Asked Questions (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ) என்று ஒரு பட்டியல் தயாரித்து அதற்கான பதில்களை மேலிடத்தில் அனுமதி பெறுமாறு அனைத்து அதிமுக பேச்சாளர்களும் அறிவுருத்தப்பட்டுள்ளனர்.

There are no comments yet