சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் இலவசங்களை வழங்கி வாக்காளர்களை கவர முயற்சி செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மக்களுக்கு ‘உபயோகமான’ இலவசங்களை வழங்கவேண்டும் என கருதி சில கட்சிகள் ‘ இலவச படகு’ வழங்க இருப்பதாக தெரியவருகிறது.
கடந்த பெருமழையில் சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் அனைவரும் படகுகளில் தப்பியதும், படகுகளில் பிரயாணம் செய்ததும் கட்சிகளை மிகவும் கவர்ந்துள்ளது. சென்னை மக்கள் இன்னும் மழையின் பாதிப்பிலிருந்து விடுபடாததால் அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி வாக்கு வங்கிகளை நிரப்ப முடிவு செய்துள்ளன. இதனையொட்டி ஒவ்வொரு சென்னை வீட்டுக்கும் ஒரு படகு வழங்க முடிவு செய்துள்ளனர். சென்னை மட்டுமல்லாது கடலூர், பாண்டிச்சேரி மக்களும் இலவச படகுகள் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
There are no comments yet
Or use one of these social networks