சென்னை: எதிர்வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு மிகை ஊதியம் அதாவது போனஸ் மற்றும் சிறப்பு மிகை ஊதியம், அதாவது சிறப்பு போனஸ் மற்றும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு ஆகியவை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை அறிந்த சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பனிகளின் ஊழியர்கள் மிக்க மன வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ‘ஏற்கனவே எங்க நிலைமை சரியில்லை, அப்பப்ப சுண்டல் கடலை மாதிரி சம்பளம் கொடுப்பாங்க, இப்பெல்லாம் போனஸ் அப்டீன்னு பேச்செடுத்தாலே வீட்டுக்கு போறியான்னு கேக்குறாங்க. பேசாம ஒரு அரசாங்க வேலையில் சேரலமான்னு நினைக்கிறோம். அங்க வேலையும் இல்ல, சம்பளம், கிம்பளம் மற்றும் இப்படி பண்டிகைகள் வந்தா போனசும் கிடைக்கும்’ என்று பொரிந்து தள்ளினர் ஒரு பொறியாளர்.
There are no comments yet
Or use one of these social networks