இளமையின் ரகசியம் : கலைஞர் தரும் டிப்ஸ்

580

இந்த 92 வயதிலும் முதல்வராக விரும்பும் கலைஞரின் இளமை ரகசியம் பற்றி கோபாலபுர வட்டாரத்தில் கூறப்படுவதாவது. தலைவருக்கு எப்பவும் மன அமைதி தான் முக்கியம், என்ன ப்ராபிளம் வந்தாலும் எவ்ளோ பெரிய ஊழல்ல இருந்தெல்லாம் விஞ்ஞானமா இருந்து தப்பிச்சாச்சு, இதெல்லாம் எம்மாத்திரம் என்று மன அமைதி கொள்வார். நம்ம தளபதி ஸ்டாலின் 62 வயசுல இளைஞரணி தலைவராயிருந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தும்போது, தலைவரின் 92 வயசு முதல்வர் ஆசையில் ஒண்ணும் தப்பு இல்லை என்று ஒரு உடன்பிறப்பு கூறினார்.

அதோட எப்பெல்லாம் தலைவருக்கு தனது மற்றும் தனது வாரிசுகளின் எதிர்காலம் பற்றி கவலை வரும்போது தமிழ்நாடு மக்களை நினைப்பார், இந்த மக்கள் இருக்கும்வரை நம்மை யாரும் அசைக்க முடியாது என்று அவருக்கு நம்பிக்கை வந்துவிடும். ஆகவே இளமையாக இருக்க தலைவர் தரும் ஒரே டிப்ஸ் ‘மன அமைதி’ தான் என்று மேலும் அந்த கழக கண்மணி கானமிசைத்தார்.

There are no comments yet