திருப்பதியில் முக ஸ்டாலின்: முதல்வரானால் கலைஞருக்கு மொட்டை அடிப்பதாக வேண்டுதல்

502

சென்னை/திருப்பதி: திமுக தலைவர் முக ஸ்டாலின், தனது நமக்கு நாமே சுற்றுப்பயணத்தின்போது வழி தடுமாறி சித்தூரை அடைந்து திருப்பதி சென்றார். வந்ததுதான் வந்துவிட்டோம் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ததாக செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து ஸ்டாலினுடன் இருந்த ஒரு திமுக நிர்வாகி கூறுகையில் ‘அண்ணன் ரெம்ப சீரியசாக சாமி கும்பிட்டார். ரெம்ப நாள் வேண்டுதல்னு நினைக்கிறேன். வெளிய வந்து ‘இப்பதான் மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது, ‘எப்பிடியாச்சும்’ நான் சீப் மினிஸ்டர் ஆயிட்டா அப்பாவுக்கு மொட்டை அடிக்கிறதா வேண்டிகிட்டேன்’ என்று கூறினார் என்றார்.

ஒரு சென்னை வாக்காளர் கருத்து தெரிவிக்கையில், மொட்டை அவருக்கு அடிக்கிராங்களோ இல்லையோ ஆனா மக்களுக்கு நிச்சயம் உண்டு என்றார்.

There are no comments yet