பதன்கோட்டில் தீவிரவாதிகள் அழிப்பு: “இந்த நாட்டில் தீவிரவாதிகளுக்கு கூட பாதுகாப்பில்லை” அறிவு ஜீவிகள் கொதிப்பு

196

பதன்கோட்/பஞ்சாப்: பதன்கோட்டில் சமீபத்தில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே. கடந்த சனிக்கிழமை பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்துக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். 17 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அதே நேரம் கடந்த 3 நாட்களாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினருக்கும், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும் இடையேயான 36 மணி நேர துப்பாக்கி சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து  தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் நாட்டில் சகிப்பு தன்மை குறைந்து விட்டதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தீவிரவாதிகளின் மீது இறக்கம் காட்டாமல் அவர்களை சுட்டு கொன்றுவிட்டதாகவும் பிரபல அறிவு ஜீவிகள் இன்று குற்றம் சாட்டினர். பலர் தமது விருதுகளையும் திருப்பி கொடுப்பதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். தீவிரவாதிகளும் மனிதர்கள்தான் அவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் அரசு மரியாதையை கொடுத்திருக்க வேண்டும், இதெல்லாம் சகித்துக்கொண்டு இன்னும் இந்தியாவில் இருப்பது எங்களது போதாத காலம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பகிர்

There are no comments yet