சென்னை: அதிமுகவினர் ‘பீப்’ புகழ் சிம்புவுக்கு நன்றியறிவிப்பு பாராட்டு விழா நடத்த இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் கூறப்படுவதாவது. நடிகர் சிம்பு பீப் பாடல் பாடி அகில உலகிலும் பிரபலமடைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இதனை ஒட்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காரணத்திற்காக அதிமுக அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளது.
இது பற்றி பெயர் சொல்ல விரும்பாத ஒரு அதிமுக பிரமுகர் அம்மாவின் ஆணைக்கிணங்கி பகிர்ந்ததாவது “நீங்களே சொல்லுங்க சார், சென்னை வெள்ளத்திற்கு பிறகு எவ்வளவு பிரச்சினைகள், மக்களின் ஆத்திரங்கள்…நிவாரணம் ஆகட்டும், ஸ்டிக்கர் பிரச்சினை ஆகட்டும், செம்பரம்பாக்கம் ஏரி ஆகட்டும், நாங்களே கொஞ்சம் பயந்துட்டோம். என்னடா எலக்சன் சமயத்துல இப்பிடி ஏடாகூடம ஆயிட்டு இருக்கேன்னு. ஆனா தக்க சமயத்துல கடவுள் மாதிரி வந்து ஒரு பீப் பாட்டு பாடி எங்கள தமிழக மக்களிடமிருந்து சிம்பு அண்ணன் காப்பதிட்டாரு. அவரு மட்டும் பீப் பாட்டு பாடலைனா சும்மா வீணா போன எதிர்கட்சிகளும், பத்திரிகைகளும், சோசியல் மீடியாவும் நைநை னு எதாச்சும் சொல்லிட்டு இருப்பாங்க. இப்ப பாருங்க எல்லாரும் எல்லாத்தையும் மறந்துட்டு பீப் பின்னாடி ஓடிக்கிட்டு இருக்காங்க. இதுக்காகத்தான் நம்ம சிம்பு அண்ணன் அவர்களுக்கு விழா எடுக்குறோம். வேண்ணா பாருங்க வரும் தேர்தலில் சிம்புவுக்கு ஒரு சீட்டு உண்டு அப்புறம் அவர் எம்எல்ஏ தான் ” என்று அடுக்கினார்.
There are no comments yet
Or use one of these social networks