மாடுகளுக்கும் ஓட்டுரிமை: பாஜக அவசர சட்டம் – அதிமுக வரவேற்பு

519

நியூ டெல்லி: சமீப காலமாக பாஜக அரசு பசுக்களை பாதுகாத்து வருவது அனைவரும் அறிந்ததே. வடஇந்தியாவில் பசுக்களை வைத்து அரசியல் நடத்திவரும் பாஜகவும், பிழைப்பு நடத்தி வரும் மற்ற இந்து மத நிறுவனங்களும் நாடு முழுவதும் பசுக்களை அன்போடு பாதுகாத்து அரவணைத்து வருகின்றன.

இது அல்லாமல் தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததால் காளைகளும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி வரும் தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற முயல்வதாக தெரிகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து மாடுகளுக்கும் ஓட்டுரிமை அளிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆளும் அதிமுகவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒரு அரசியல் விமர்சகர் கூறும்போது ‘இதுனால ரெம்ப பெரிய வித்தியாசம் ஒண்ணும் வந்துராது. ஆரம்பத்தில கொஞ்சம் குழப்படி இருக்கும், ஆனா போக போக எல்லாம் அட்ஜஸ்ட் ஆயிரும். அதோட இதுனால சில குடும்பங்களோட ஓட்டு வருமானம் அதிகமாகும். ஏன்னா மாடுகளுக்கும் ஓட்டுக்கு பணம் கிடைக்குமே’ என்றார்.

There are no comments yet