சென்னை: இந்த தள்ளாத வயதிலும் ‘உழைத்து’ வாழவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் கலைஞர் கருணாநிதியை இன்று திருப்பதி தேவஸ்தான அரச்சகர்கள் சந்தித்தனர். இது குறித்து திமுகவின் அதிகாரபூர்வமற்ற அறிவிப்பாளர் கோபாலபுரம் குப்பன் கூறியதாவது: ராமானுஜர் தொடரை பார்த்த திருப்பதி தேவஸ்தானம் கலைஞரை வெகுவாக பாராட்டி எப்படியாவது அவர் தங்களது பஜனை கோஷ்டியில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறது. இதன் முதல் முயற்சியாக சில அர்ச்சகர்களை தலைவர் வீட்டுக்கு அனுப்பி திருப்பதி கோயிலில் பார்ட் டைம் பஜனை பாட சம்மதம் கேட்டுள்ளது.
தற்போது தமிழக தேர்தல் வருவதால் தமிழ் மக்களை முதலில் ‘என்டர்டைன்மென்ட்’ செய்யும் கடமை இருப்பதால் பார்ட் டைம் பஜனைக்கு தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார். தேர்தலுக்கு பிறகு முழு நேரமாக ஆண்டவனுக்கு தொண்டு செய்யும் வாய்ப்பை தமிழக மக்கள் தலைவருக்கு அளிப்பார்கள் என நம்புகிறேன்; என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks