தேர்தலுக்கு பின் அன்புமணி முதல்வர்: ராமதாஸ் திட்டம்

496

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அன்புமணியை முதல்வராக்க பாமக ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. இது பற்றி பாமக தரப்பில் கூறப்படுவதாவது. தன் மகனை எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்க்க ராமதாஸ் விரும்புகிறார். அதற்காக என்ன விலை கொடுக்கவும், யாருடனும் கூட்டணிக்கு தயாராக உள்ளார். ஆனால் பாமகவை யாரும் சீண்ட மாட்டேன் என்கிறார்கள்.

ஆகையால் தேர்தலுக்கு பிறகு ‘மரம் வெட்டி பயிற்சி கல்லூரி’ ஒன்று ஆரம்பித்து அதற்கு அன்புமணியை முதல்வராக்க முடிவுசெய்துள்ளார். இதற்காக திண்டிவனம் அருகே 100 ஏக்கர் மரங்கள் நிறைந்த காட்டு பகுதியை வளைத்துப்போட்டு கல்லூரி கட்டும் பணி நடந்து வருகிறது.

வேலை வாய்ப்பு: இந்த கல்லூரியில் படித்து வெளியே வரும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புக்காக தனது கட்சியிலேயே ‘மரம் வெட்டி போராளிகள்’ என்ற புதிய பிரிவையும் ஆரம்பிக்கிறார். மேலும் வேலை வாய்ப்புக்காக விடுதலை சிறுத்தைகள், கம்யுனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகளை அணுக இருப்பதாகவும் தெரிகிறது.

There are no comments yet