சட்டமன்ற வளாகத்தில் டாஸ்மாக் வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

227

சென்னை: ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற வளாகத்தில் ஒரு டாஸ்மாக் வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை விஜயகாந்த் வைக்க இருப்பதாக அவரது கட்சி பிரமுகர் தெரிவித்தார். இது பற்றி மேலும் அவர் கூறியதாவது. ‘குடி’ மக்களின் வசதிக்காக அண்ணன் எவ்வளவோ பாடுபடுகிறார், இரவு பகல் பாராமல் உழைக்கிறார். சட்டமன்றம் நடக்கும் போதும் எங்கள் எம்ல்ஏக்கள் மற்றும் அனைத்து கட்சி எம்ல்ஏக்களின் விருப்பத்தை மனதில் கொண்டு சட்ட மன்ற வளாகத்திலேயே டாஸ்மாக இருக்க வேண்டும் என்று அண்ணன் நினைக்கிறார். அண்ணனின் நல்ல மனதை இப்போதாவது அனைத்து கட்சியினரும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன் என்றார்.

ஒரு திமுக எம்ல்ஏ கூறும்போது, நல்ல விஷயம்தான் சார். அட் லீஸ்ட் இதுக்காகவாவது எங்களோடஎம்ல்ஏக்கள் சட்ட மன்ற கூட்டத்திற்கு வர வாய்ப்பு உண்டு என்றார். அதிமுகவின் பெரும்பாலான எம்ல்ஏக்களும் விஜயகாந்தின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet