திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மூடல்: கரும்போடு குவார்ட்டரும் கொடுக்க குடிமக்கள் கோரிக்கை

217

சென்னை: ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதால், பொங்கல் பரிசாக கரும்போடு தமிழக அரசு குவார்ட்டரும் கொடுக்க வேண்டும் என பெரும்பாலான குடிமக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சென்னை சரக்கு பேட்டையை சேர்ந்த ஜானி வாக்கர் கூறியதாவது. இது என்னங்க நியாயம். வருஷம் பூராவும் குடி குடின்னு திறந்து வெச்சிட்டு, என்னமோ பெரிசா திருவள்ளுவர் தினம்னு ஒரு நாளைக்கு மூடிட்டா போதுமா.என்னமோ சினிமால வர மாதிரி நாங்கல்லாம் என்ன ஒரே நாள்ல திருந்திருவோமா என்ன என்று பொரிந்து தள்ளினார்.

ஒரு பொதுஜனம் சொல்லும்போது, இன்னிக்காவது இவங்கல்லாம் திருவள்ளுவரை நினைப்பாங்க, ஆனா என்ன அவரை திட்டிட்டே நினைப்பாங்க என கவலைப்பட்டார்,

There are no comments yet