தமிழ் இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் ‘டைம் வேஸ்ட் பண்றாங்களே’ – நக்மா வருத்தம்

700

சென்னை: தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரவேற்கத்தக்கது என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மா கூறியிருக்கிறார். மேலும் மக்களை திசை திருப்பவே கலாச்சாரம், உணர்வு என்ற பெயரில் சிலர் பொது மக்களை குழப்புகின்றனர், தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் ‘டைம் வேஸ்ட்’ பண்ணாமல் உருப்படியா ‘என்ன மாதிரி நடிகைகளுக்கு கோயில் கட்டுவது, நடிகர்/நடிகைகளின் பிறந்த நாளுக்கு மொட்டை அடிச்சு, பால் அபிஷேகம் பண்றது’ மாதிரி நேரத்தை செலவிட வேண்டும், அதுதான் கலாச்சார தொண்டு.

ஜெயலலிதா ஆட்சியில் தமிழ் இளைஞர்கள் கெட்டு போய் இருக்கிறார்கள், இதை மாற்ற வேண்டுமானால் நான் திரும்பவும் ‘(நடிகை) தொழிலுக்கு’ வரவேண்டியது போல் இருக்கிறது. ஜல்லிக்கட்டை சிலர் அரசியல் ஆக்கிப்பார்த்து ஆதாயம் தேட முயற்சி செய்கின்றனர் என்று நக்மா கண்டனம் தெரிவித்தார்

There are no comments yet