தமிழ் நாட்டின் பெயரை ‘கொட நாடு’ என மாற்ற வேண்டும் – கட்ஜு யோசனை

526

உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தான் தடை விதித்தது . அதனால் இவ்விளையாட்டுக்கு பெயரை மட்டும் மாற்றுங்கள் போதும். ‘பொங்கல் விளையாட்டு’ என்று பெயர் மாற்றி தொடர்ந்து விளையாடுங்கள், அதற்கு எந்த தடையும் இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியது அனைவரும் அறிந்ததே.

இப்போது, தமிழ்நாட்டின் பெயரை ‘கொட நாடு’ என மாற்ற வேண்டும் என்றும் மார்கண்டேய கட்ஜு யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது முகநூலில் பதிவிட்டுள்ளது: மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் பற்றி தமிழர்கள் கவலைப்பட தேவையில்லை. பிரச்சினைகளை தீர்க்க தமிழ்நாட்டின் பெயரை ‘கொட நாடு’ என மாற்ற வேண்டும், அப்படி மாற்றிவிட்டால் யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது. ‘கொட நாடு’ என்ற மாநிலம் இந்தியாவில் இல்லை என்றும் சொல்லி சமாளித்து விடலாம் என்றார்.katju

பொதுஜனம் இசக்கி கூறும்போது இவரு எப்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆனாருன்னே தெரியவில்லை. ஒருவன் யாரையாவது கொலை செய்து விட்டு, நான் கொலை செய்யலை சும்மா உயிரைத்தான் எடுத்தேன் என்று சொன்னால் விட்டுவிடுவாரு போல. படிச்சுத்தான் பதவியை புடிச்சாரா? இல்லை யாரையாவது புடிச்சு பதவியை புடிச்சாரா தெரியவில்லையே? என்று வினா எழுப்பினார்.

There are no comments yet