தமிழக அரசின் பொங்கல் கரும்பில் சுவையில்லை: விஜயகாந்த் ‘த்தூ’

245

சென்னை: பொங்கல் திருநாளை பொது மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.318 கோடி செலவில், தலா ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, ரூ.100 ரொக்கம் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதுகுறித்து விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, திடீரென ‘ஜெயாவின் கரும்பில் சுவையில்லை, த்தூ என்று துப்பினார்.இதை கண்ட அனைத்து செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சர் பன்னிர்செல்வம் தனது கண்டன அறிக்கையில், நடிகர் விஜயகாந்த் கரும்பை அவமதிக்கவில்லை, தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகையையே அவமதித்துள்ளார். அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். மேலும் கரும்பில் அடி கரும்பு, நுனி கரும்பு என்றும் உள்ளது, அடி கரும்பு தான் எப்போதும் சுவையாக இருக்கும், இது கூட தெரியாத ‘கருத்து கந்தசாமி’ எல்லாம் அரசியலுக்கு வந்து விட்டார் என்ற சாடினார்.

ஒரு தேமுதிக தொண்டர் ‘கேப்டன் சாதாரணமா கரும்பை திண்ணுட்டு சக்கையை த்தூ என்று துப்பினார், ஆனா இந்த பத்திரிகைகாரங்க அத பெரிசு பண்ணிட்டாங்க என்று வருத்தப்பட்டார்.

There are no comments yet