வெளிநாடுகளில் இந்தியர் எண்ணிக்கையும் சகிப்புத்தன்மையும் அதிகரித்துள்ளது – ஆமிர்கான்

189

உலக நாடுகளில் வாழும் வேற்று நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்று ஐ.நா.சபை தன்னுடைய ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி 1.6 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990 ஆம் ஆண்டு கணக்கை விட 67 லட்சம் அதிகமாகும்.

இதுகுறித்து பாலிவுட் நடிகரும் சகிப்புத்தன்மை அறிவு ஜீவியுமான ஆமிர்கான் கருத்து தெரிவிக்கையில், ஐ.நாவின் இந்த அறிக்கையாவது பாஜகவின் கண்களை திறக்கட்டும். வெளிநாட்டினர் இத்தனை இந்தியர்களை பொறுத்து கொண்டு வாழ்கின்றனர் என்றால் அதுதான் சகிப்புத்தன்மை. இந்தியனாக இருந்து என்னாலேயே இந்தியர்களை சகிக்க முடியவில்லை, வெளிநாட்டினர் ரியலி கிரேட் என்றார்.

There are no comments yet