ஒரு சீட்டு வேண்டி போயஸ் கார்டனில் சரத் குமார் கரகாட்டம் – கிருஷ்ணசாமி, வேல்முருகன் ஆதரவு

1665

சென்னை: வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் எப்படியாவது ஒரு சீட்டு வாங்கிவிடவேண்டும் என்று நடிகர் சரத் குமார் முயற்சி செய்து வருவது அனைவரும் அறிந்ததே. முதல்வர் ஜெயலலிதா பிடிகொடுக்காமல் இருப்பதால் சரத் குமார் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவரைப்போலவே தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் மற்றும் புதிய தமிழகம் கிருஷ்ண சாமியும் சரத் குமாருடன் சேர்ந்து ஆலோசனை செய்து, ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை படுவதற்கு எதாவது நூதன யுக்தியை கடைபிடிக்க முடிவுசெய்துள்ளனர். அனால் மண் சோறு சாப்பிடுவது, காவடி எடுப்பது மற்றும் அலகு குத்துவது எல்லாம் முன்னமே அதிமுக அமைச்சர்கள் செய்து விட்டதால், சற்று புதுமையாக கரகாட்டம் ஆடி ஜெயலலிதாவை மனம் குளிர வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக சரத் குமார் துத்துக்குடியிலும், வேல்முருகன் பண்ட்ருட்டியிலும், கிருஷ்ண சாமி ஓட்டபிடரத்திலும் கரகாட்டம் ஆரம்பித்து போயஸ் கார்டனை அடைவதாக திட்டம் தீட்டியுள்ளதாக அரசியல் வட்டங்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி ஒரு அதிமுக பிரமுகர் சொல்லும்போது, ‘இதனால ஒரு பிரயோஜனமும் இல்லை, இவங்க கரகாட்டம் ஆடினாலும், கயிற்று மேல நின்றாலும் இந்த தடவ சில்லறை கட்சிகளுக்கு எல்லாம் நாமம் தான் என்றார்.

There are no comments yet