குடிமகன்களுக்கு வட்டியில்லா கடன் – டாஸ்மாக் விற்பனையை உயர்த்த ஜெயலலிதா அதிரடி திட்டம்

307

சென்னை: தமிழகத்தில், மது விலக்கை அமல்படுத்தக் கோரி, சில மாதங்களுக்கு முன், எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை நடத்தின. சிம்புவின் ‘பீப்’ பிற்கு பிறகு எதிர்க்கட்சிகள் அனைவரும் டாஸ்மாக் பிரச்னையை மறந்துவிட்டனர்.

தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் கடைகளில், தினமும், சராசரியாக, 70 கோடி ரூபாய்; ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 95 கோடி ரூபாய்; தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், மது விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டும். சென்னை வெள்ளத்திற்கு பின் டாஸ்மாக் விற்பனை குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மது விற்பனையில், 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுஉள்ளது. மது விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 225 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில், விற்பனையாளர், எடையாளர் என, 30 ஆயிரம் ஊழியர்கள் நேரடியாக பணிபுரிகின்றனர். மது ஆலை, கிடங்குகள், போக்குவரத்து என மேலும், 50 ஆயிரம் பேர் மறைமுகமாக பணிபுரிகின்றனர். ஒரு ஊழியரை நம்பி, ஒரு குடும்பத்தில், மூன்று பேர் உள்ளனர்.tasmac

இவர்களின் எதிகாலத்தை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் விற்பனையை உயர்த்த முதல்வர் தமிழகத்தில் அனைத்து குடிமகன்களுக்கும் சரக்குக்காக வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட இருப்பதாக நம்பத்தகாத தகவல்கள் கூறுகின்றன. இதனால் வேலையில்லா பட்டதாரிகளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப் படுகிறது

There are no comments yet