திமுகவிற்கு ஓட்டுப் போடாவிட்டால் என் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்துவிடும் – கருணாநிதி உருக்கம்

12055

சென்னை: வரும் சட்ட மன்ற தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு ஓட்டுப் போடாவிட்டால் என் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிடும் என்று கலைஞர் கருணாநிதி இன்று கண்ணீரும் கம்பலையுமாய் உருக்கமாக பேசினார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ஓட்டு வாங்கும் பணியில் ஈடுபட்டிருந்த கருணாநிதி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, கடந்த தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு வாக்களிக்காததால் என் குடும்பத்திற்கு நேர்ந்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல, என் மகள் கனி மொழி ஜெயிலுக்கு போக நேர்ந்தது, என் மனைவிகளில் ஒருவரை சிபிஐ ரெய்டு செய்தது, எனது பேரன்கள் கலாநிதி, தயாநிதி மாறன்கள் ஜெயிலுக்கு போகும் வேளை உருவாகி உள்ளது. எனது பேரன்களும், உறவினர்களும் எடுக்கும் டப்பா படங்களுக்கு வரிவிலக்கு கூட கிடைக்கவில்லை.

இது அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான், நீங்கள் கடந்த தேர்தலில் எனது கட்சிக்கு ஒட்டுப்போட்டிருந்தால், என் குடும்பத்திற்கு இந்த நிலைமை வந்திருக்காது, எம்ல்ஏக்களையும், எம்பிக்களையும் வைத்து மத்திய அரசை மிரட்டி இவை எல்லாவற்றையும் தடுத்திருப்பேன். தயவு செய்து என் குடும்பத்தை காப்பாற்ற திமுகவிற்கு ஓட்டுப்போடுங்கள் என உங்களை கண்ணிர் மல்கி, காலை தொட்டு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

There are no comments yet