மும்பை: காங்கிரஸ் நிபந்தனைகளை ஏற்றால் அடுத்த 15 நிமிடத்தில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். மும்பையின் முன்னணி கல்வி நிறுவனம் ஒன்றில் மேலாண்மைத் துறை மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது. என்னை பிரதமர் மோடி எப்போதும் ‘பப்பு’ (அப்பாவி சிறுவன்) என்றுதான் அழைக்கிறார். அவரது கட்சிக்காரர்களும் என்னை பப்பு காந்தி என்றே அழைக்கின்றனர். கடந்த பல வருடங்களாக நானும் எவ்வளவோ வளர முயற்சி செய்து பார்த்தேன், என்னால் முடியவில்லை. இப்போது எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளது. பாஜகவும், பிரதமர் மோடியும் என்னை அடல்ட் (வயதுக்கு வந்தவன்) என ஒத்துக்கொண்டால் அடுத்த 15 நிமிடத்தில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறும். அதற்கு நான் பொறுப்பு என்றார்.
இதுகுறித்து பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது. தன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதாவை ஆதரிக்க தயார் என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார். கடைசி நேரத்தில் திடீரென்று இந்த மசோதாவிற்கு அவர் நிபந்தனை விதிப்பது சரி அல்ல. ராகுல் காந்தியை பப்பு என்றும், சிறுவன் என்றும் கூப்பிடுவது அவரவர் விருப்பம், அதில் அரசு தலையிட முடியாது. இது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks