குடும்பத்துடன் கோர்ட்டுக்கு சென்றது மனதுக்கு இதமளிக்கிறது, தான் குடும்பத்துடன் சிறைக்கு செல்லவும் ஜெயலலிதா ஆவன செய்ய வேண்டும் – கலைஞர் கோரிக்கை

428

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு, சென்னை முதன்மை அமர்வு சிறப்பு கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக, கருணாநிதி, கோர்ட்டில் நேரில் ஆஜராகியிருந்தார். அவருடன் மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி மற்றும் பேரன் தயாநிதி மாறன்ஆகியோரும் வந்திருந்தினர். விசாரணை முடிந்த பின் கோர்டுக்கு வெளியே கலைஞர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.இப்போது 2-G வழக்கு கடைசி கட்டத்திற்கு வந்துள்ளதால் இப்போவே நீதிமன்றத்திற்கு போய் ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறேன். அரசு செலவில் இலவச விளம்பரம் கிடைத்தது என்பதால் குடும்பத்தோடு வந்தேன்.

எனது அடுத்த ஆசை இதே மாதிரி குடும்பத்தோடு ஜெயிலுக்கும் போக வேண்டும் என்பது தான். ஏற்கனவே எனது குடும்பத்தினர் கனி, தாயாளு , மற்றும் மாறன் ஆகியோர் சிறைக்கு செல்வது சற்றே உறுதியான நிலையில் எனது மற்ற குடும்பதினர் மற்றும் சொந்தங்களை தகுந்த வழக்குகளில் சிபாரிசு செய்து ஜெயிலுக்கு அனுப்ப ஜெயலலிதா முற்சிக்க வேண்டும். அப்போது என் குடும்ப புகழ் உலகெல்லாம் பரவும். அந்த மாதிரி பப்ளிசிட்டி கோடி கொடுத்தாலும் கிடைக்காது என்று ஆதங்கப்பட்டார்.

இது பற்றி ஒரு பொது ஜனம் கூறும்போது. இந்த மாதிரி கோர்டுக்கு, ஜெயிலுக்கு போறதெல்லாம் இவங்களுக்கு கோயிலுக்கு போற மாதிரி சார். ஓட்டுக்காகவும், பப்ளிசிட்டிகாகவும் இவங்க எத வேணாலும் பண்ணுவாங்க என்றார்.

There are no comments yet