சென்னை: தமிழகத்தில் ஜாதிக்கட்சிகள் பெருகி விட்டதாகவும் அவை சமுதாயக் கேடாக மக்களை பிரித்து ஓட்டு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தெரிவித்தார்.
முன்னதாக தனது ‘மரம் வெட்டி பயிற்சிக் கல்லூரி’யில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றிய ராமதாஸ் புற்றீசல் போல் பெருகி வரும் ஜாதிக்கட்சிகளினால் தனது தனித்தன்மை போய் விட்டதாகவும், தற்போதைய பேஸ்புக் வாட்ஸ் அப் யுகத்தில் யாரும் ஜாதிக்கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டேன் என்கிறார்கள், மதிக்கவும் மாட்டேன் என்கிறார்கள் என வருத்தப்பட்டார்.
ஜாதிகளை வைத்து பிழைப்பு நடத்தும் திருமாவளவன், சேதுராமன், சரத் குமார், மற்றும் கிருஷ்ணசாமி, வேல்முருகன் ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்து பேசும் போது ‘முன்ன மாதிரி இப்ப வியாபாரம் சரியில்லை, மக்கள் கொஞ்சம் தெளிஞ்சிட்டங்க, பெரிய கட்சிகள் கூட கூட்டு சேர்ந்தா ஒரு சீட்டும் நிறைய சூட்கேசும் கிடக்கும் அதுவும் இப்ப ரெம்ப கஷ்டமா இருக்கு. அதுனால கடைய மூடிட்டு வேறு வியாபாரம் பண்ணலான்னு இருக்கோம் என்றனர் கோரஸாக.
அடுத்து என்ன தொழில் செய்யலாம் என அனைத்து ஜாதிக்கட்சியினரும் அடுத்த மாதம் சென்னையில் கூட்டு பொதுக்குழு நடத்தி விவாதிக்க இருப்பதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks