நான் ரசிகர்களுக்காக படம் எடுப்பதில்லை – உதயநிதி காட்டம்

711

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான கெத்து படத்தை சில விமர்சகர்கள் கொத்து பரோட்டா போட்டதால் அப்செட் ஆன உதயநிதி  இன்று காட்டமாக செய்தியாளர்களிடம் பேசினார். ‘என் படத்தை யாருக்கும் விமர்சிக்க அருகதை இல்லை. என் படம் ஓடவில்லை, ஊத்திக்கொண்டது என்றெல்லம் எழுதுகிறார்கள், உண்மையை சொல்லும் அவர்களை நான் சட்டை செய்யப்போவதில்லை. நான் விமர்சகர்களுக்காகவோ அல்லது ரசிகர்களுக்காகவோ படம் எடுப்பதில்லை. என் கலைத் தாகத்தை தணிக்கவே படம் எடுக்கிறேன். என் பரந்த குடும்பத்தினர் பார்த்தாலே என் படங்கள் நூறு நாள் ஓடிவிடும்’ என்றார்.

இது பற்றி ஒரு அறிவாலய அறிவாளி கூறும்போது. இவிங்க கருப்ப வெள்ளையாக்க கலர்ல படம் எடுக்கிறாங்க, நமக்கெல்லாம் நல்லா பிலிம் காட்டுறாங்க என்று உண்மை விளம்பினார்.

There are no comments yet