ஜல்லிக்கட்டு விளையாடத் தெரியாதவர்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – சீமான் புதுப் போராட்டம்

384

சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டாகவும் கலாசாரச் சிறப்பாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டு விளையாடத் தெரியாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது.

சங்க காலம் தொடங்கியே மாடுபிடி விழாக்கள் தமிழ் மண்ணில் நடjallikkattuந்து வருகின்றன. வேளாண்மையில் விவசாயிகளுக்கு நிகரான உழைப்பை வெளிப்படுத்தும் மாடுகளைக் கொண்டாடவும், அவற்றுக்கு நன்றி பகிரவும், வீரத்தை வெளிக்காட்டவுமே ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தமிழனின் வாழ்விலும் வழிபாட்டிலும் மாடுகள் தவிர்க்க முடியாதவையாக பண்டைய காலம் தொட்டே விளங்குகின்றன. இந்த ஜல்லிக்கட்டுதான் தமிழனின் அடையாளம், ஜல்லிக்கட்டு விளையாடத் தெரியாதவர் தமிழன் கிடையாது. அவர்கள் தமிழ் நாட்டை விட்டு உடனே வெளியேற வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு விளையாடத் தெரியாதவர்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உடனடி அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையேல், ஒருமித்த தமிழர்களையும் திரட்டி மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

There are no comments yet