செம்பரம்பாக்கம் ஏரிக்கு 100 கோடி செலவில் வாஸ்து பூஜை – ஜெயலலிதா பரிகாரம்

565

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் தாமதமாக நீர் திறக்கப்பட்ட காரணத்தால் தான் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டதாக ஊடகங்களும் எதிர்கட்சிகளும் தமிழக அரசை குறை கூறி இருந்தன. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருஷ்டி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு பரிகாரமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 100 கோடி செலவில் வாஸ்து பூஜை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

jayalalithaa
J

இது குறித்து தலைமை செயலக அதிகாரி ‘அம்மா’வாசை பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறியதாவது. இந்த . எதிர்கட்சிகளும், மீடியாவும் செம்பரம்பாக்கம் ஏரியோட பெயரையே கெடுத்துட்டாங்க. சென்னைக்கே தாகம் தீர்க்கும் இந்த ஏரிய கரிச்சு கொட்டிட்டாங்க, அதனால அரசோட ஆஸ்தான ஜோசியர்களின் ஆலோசனைப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வாஸ்து பூஜை செய்யறதா முடிவு பண்ணியிருக்கோம். அதுக்கு எப்படியும் குறைந்தது 100 கோடி வரைக்கும் செலவாகும். உலக வங்கியிலும், ஜப்பானிலும் கொஞ்சம் கடன் கேட்டிருக்கோம். பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ்சிடம் கேட்டு உதவி பண்றதா சொல்லியிருக்கார் என்றார்.

வாஸ்து பூஜை பற்றி கேள்விப்பட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும், இப்போதிலிருந்தே வாஸ்து மந்திரங்களை ஜபிக்க ஆரம்பித்து விட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet