ஜெயலலிதா தமிழகத்தின் நிரந்தர ‘பிரதமர்’ – சட்டசபையில் கவர்னர் ரோசைய்யா ‘அம்மாவுக்கு’ புகழாரம்

213
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் ரோசைய்யா தமிழக அரசு செய்த சாதனைகள் குறித்து பேசி முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவிலேயே மிகச்சிறந்த முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு நிகர் அவர்தான், அவர் ஆட்சி செய்யும் பாங்கும், மக்கள் குறை தீர்க்கும் மனமும் உலகிலேயே யாருக்கும் இல்லை. ‘அம்மா’ நமக்கெல்லாம் முதல்வர் மட்டுமல்ல, தமிழ் ‘நாட்டின்’ பிரதமர், அவர் மக்களை ‘பாரா’ சக்தி என்றும் மேசையை தட்டி புகழாரம் சூட்டினார்.
அமைச்சர்கள் கிலி: ஆளுநர் ரோசைய்யாவின் இந்த போக்கை கண்ட அதிமுக அமைச்சர்கள் அனைவரும் கிலியில் இருப்பதாக தெரிகிறது. ஒரு அடிமை அமைச்சர் கூறும் போது ‘இந்த ஆளு எங்களுக்கு போட்டியா வந்துருவாரு போல இருக்கு, இவரு வர்ற எலக்சன்ல அம்மாகிட்ட ஒரு சீட்டுக்கு கூத்தாடுகிற சில்லறை கட்சி மாதிரி சட்டசபையில் பேசி எங்களையெல்லாம் டம்மி ஆக்கிடுவார் போல’ என்றார்.

There are no comments yet