மது குறித்து பேச திமுக, அதிமுகவிற்கு தகுதியில்லை, கேப்டன் விஜயகாந்திற்கு மட்டுமே முழு உரிமை உள்ளது – வைகோ

313

திருநெல்வேலி: ”தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தவே முடியாது,” என, சட்டசபையில் நேற்று, அந்தத் துறையின் அமைச்சர் ‘நாத்தம்’ விஸ்வநாதன் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால், ‘குடி’மகன்கள் அனைவரும், குஷி அடைந்துள்ளனர். மது விலக்கை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்தன.

இதுகுறித்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது, மதுவிலக்கு பிரச்சினையில் அ.தி.மு.க., தி.மு.க.,ஆகிய இருகட்சிகளின் சுயரூபமும் அம்பலமாகிவிட்டன. மது பற்றி பேசும் யோக்கியதை, தி.மு.க, அதி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இல்லை, கேப்டன் விஜயகாந்த் மட்டுமே மது பிரச்சினையை கரைத்து ‘குடித்தவர்’, மேலும் இந்த விவகாரத்தில் நிறைந்த அனுபவமும், ஈடுபாடும் கொண்டவர், அவருக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது. எனவே கேப்டனை ‘கலந்து’ பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்றார்.

There are no comments yet