சென்னை: சட்டமன்ற உரிமை மீறிய பிரச்னைக்காக, கருணாநிதிக்கு தண்டனை வழங்காமல் அவரது வயதை கருத்தில் கொண்டு அவருக்கு வெறும் எச்சரிக்கை விடுத்து, கடுமையான கண்டனத்தை சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இது குறித்து கலைஞர் இன்று முரசொலியில் எழுதிய கேள்வி பதிலில் கூறியுள்ளதாவது.
கேள்வி: உங்களை சபாநாயகரும், ஜெயலலிதாவும் மன்னித்து விட்டுவிட்டனரே?
பதில்: அதிமுகவினரை அரக்க குணம் படைத்தவர் என நினைத்திருந்தேன், இப்போதுதான் அவர்கள் கொஞ்சம் இரக்கமும் உள்ளவர் என உணர்கிறேன். தமிழகத்திற்கே தாயான என் அன்புச் சகோதரியின் கருணையில் இந்த பாவியை மன்னித்ததை எண்ணி என் மனமார்ந்த நன்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். என் வயதைப்போல் என் ஊழல்களும் அதிகம்தான், சர்க்காரியா முதல் 2-ஜி வரை எனது வயதுக்கும் முதுமைக்கும் என் விஞ்ஞான ஊழல்களே சாட்சி. என் தங்கத் தலைவி செம்பரம்பாக்கம் தாய் ‘இன்னா செய்தாரை ஒருத்தல்’ என்ற குறளுக்கு இலக்கணமாய் விளங்கும் புரட்சித் தலைவி இந்த முதியவனின் ஊழல்களையும் மன்னிக்க வேண்டுகிறேன்.
There are no comments yet
Or use one of these social networks