சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2014-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஜெயிலில் இருந்த 22 நாட்களும் அவரது செயல்திறன் நன்றாக இருந்ததாக 75 சதவீதம் பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டில் அதிகபட்சமாக 0.0 (பூஜ்யம்) சதவீதம் பேரே திருப்தி தெரிவித்துள்ளனர்.
யார் தலைமையில் ஆட்சி அமையும் என்ற யூகத்துக்கு நடிகர் கார்த்திக்கின் பெயர் தெரியாத கட்சிக்கு 92 சதவீதம் பேரும், அ.தி.மு.க. அணிக்கு ஒரு சதவீதம் பேரும், தி.மு.க. அணிக்கு முக்கால் சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்கள் நல கூட்டணிக்கு ஏழரை -யும், கேப்டன் விஜய காந்துக்கு ‘அறை’ சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். காகிதம் வீணாகக்கூடாது, மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதால், மரம் வெட்டி ராமதாஸின் பாமக கருத்துக் கணிப்பில் சேர்க்கப்படவில்லை.
நடிகர் கார்த்திக்கின் பெயர் தெரியாத கட்சிக்கு வெற்றி வாய்ப்பு: தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இன்று வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு நடிகர் கார்த்திக்கின் பெயர் தெரியாத கட்சி ஆட்சி அமைய வாக்களிப்போம் என்று 97 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று இது வரை யாரும் சொல்லவில்லை. ஆனால் 100 சதவீதம் பேர் பணம் வாங்கிக் கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்போம் என்றார்கள். இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நடிகர் கார்த்திக்கின் கட்சி 173 இடங்களைப் பிடிக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோ ஆதரவு: கருத்துக் கணிப்பு பற்றி ‘கருத்து’ தெரிவித்துள்ள வைகோ, தமிழ்நாட்டில் தற்போது புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாறுதல் வேண்டும் என்பது வேகமாக வளர்ந்து வருகிறது. நடிகர் கார்த்திக் எனது நீண்ட கால நண்பர். அவர் கண்டிப்பாக மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து இந்த கூட்டணியை வலுப்படுத்துவார் என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks