ராணிப்பேட்டை: இன்னும் 100 நாட்களிலேயே தமிழகத்துக்கு விடிவு வந்துவிடும் என்று நடிகை குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நக்கத் கான் குஷ்பு பேசியதாவது:
தேர்தலுக்கு இன்னும் 100 நாள்தான் உள்ளது, அதற்குள் தமிழ் நாட்டில் காங்கிரஸ் காணாமல் போய் விடும், அதன் பிறகு தமிழகத்துக்கு விடிவுதான். தமிழ்நாட்டில் மக்களை மகிழ்விக்க காங்கிரஸ் உள்ளது, நானும், நக்மாவும் தமிழ் மக்களுக்கு கலைச் சேவை செய்து காங்கிரஸ் மூலமாக எண்டர்டைன்மெண்ட் செய்கிறோம். எனவே காங்கிரசின் அழிவு உறுதி, இதில் மாற்றம் இல்லை. தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஓய்வில்லாமல் உழைத்து, இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவி வருகிறார்.
காரைக்குடி ஆச்சி பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. ஆச்சியின் நிலை மோசமாக இருக்கிறது. இன்னும் 100 நாள் தாக்குப் பிடிக்குமா எனக் கூட தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் ஆச்சி பாதுகாப்பாக இருந்தார். இன்னும் 100 நாட்களில் ஆச்சிக்கு முடிவு வந்து விடும். இவ்வாறு குஷ்பு உளறினார்.
There are no comments yet
Or use one of these social networks