​எந்திரன் 2 வில் ரஜினியின் நடிப்பிற்காகவே ரஜினிக்கு பத்மவிபூஷண் வழங்கப்பட்டது , தேர்தலுக்காக அல்ல – பாஜக விளக்கம்

264

சென்னை: தேர்தல் நேரத்தில் ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது கொடுக்கப்பட்டிருப்பது குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழ் இ(ம்)சை சௌந்தரராஜன் கூறியதாவது. வரும் தேர்தலை மனதில் வைத்து ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தவே ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப் பட்டிருப்பதாக சில ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் பேசி வருகின்றன.rajini robo

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி 2017 அல்லது 2018-ல் வெளியாக இருக்கும் எந்திரன் 2 வில் நடிக்கும் ரஜினியின் நடிப்பிற்காகவும், சென்னை வெள்ளத்தின் போது வெளிப்பட்ட அவரது மனித நேயத்திற்காகவும் மட்டுமே பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களை கவர வேண்டும் என்ற எண்ணம் பாஜகவிற்கு இல்லை, ரஜினியைப் போலவே அவரது ரசிகர்களும் குழப்ப வாதிகள் என எங்களுக்குத் தெரியும் என்றார்.

பகிர்

There are no comments yet