கூட்டணிக்காகவும், பதவிக்காகவும் எந்தக் கதவையும் தட்டத் தயார் – திருவாரூரில் கலைஞர் பே (போ)ட்டி

729

திருவாரூர்: திருவாரூரில், தி.மு.க., சார்பில் நடந்த, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

கேலிச்சித்திரம் நன்றி: கார்டூனிஸ்ட் பாலா
கேலிச்சித்திரம் நன்றி: கார்டூனிஸ்ட் பாலா

தேர்தல் கூட்டணி வெறுக்க தக்கதல்ல. வரவேற்க தக்கது. கூட்டணிக்காகவும், பதவிக்காகவும் எந்தக் கதவையும் நான் தட்டத் தயார். என் குடும்ப மக்கள் விரும்பினால், திருவாரூர் சட்டசபை தொகுதியில், நான் மீண்டும் போட்டியிடுவேன். தின மலர் நாளிதழ் என்னை 93 வயது முதியவன் என கேலி செய்கிறது, என் மனதுக்கு வயது 39 தான். என்னால் அதே பழைய உற்சாகத்தோடு ஊழல்கள் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கொடுப்பீர்கள் என் நம்புகிறேன் என பேட்டியளித்தார்.

There are no comments yet