​ரஜினிக்கு போட்டியாக கமலுக்கு ‘கருத்து கந்தசாமி’ விருது – தமிழக அரசு முடிவு

427

​சென்னை: சமீபத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷண் விருது வழங்கியது குறித்து அரசியல் வட்டாரத்தில் சல சலப்பு ஏற்பட்டது. வரும் சட்ட மன்ற தேர்தலை குறி வைத்தே ரஜினிக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாக வதந்தி உலவி வருகிறது. இந்நிலையில் உலக நாயகன் கமல் மீது மத்திய அரசு பாரா முகமாக இருப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அம்மாவின் ஆணைக்கிணங்கி ஒரு பெயரில்லாத அடிமை அமைச்சர் கூறியதாவது. ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது வழங்கியதில் அரசியல் உள்ளது. நிஜத்திலும், சினிமாவிலும் நடிக்கும் ஒரே நடிகன் உலக நாயகன் கமலை மத்திய சர்க்கார் மறந்து விட்டது. சென்னை வெள்ளத்தின் போது ஜொலித்த கமலின் நடிப்பை பாராட்டி தமிழக அரசு அவருக்கு ‘கருத்து கந்தசாமி’ என்ற விருது கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

There are no comments yet