‘எனக்கு நானே’ நெடுந்தூர நடைப்பயணம் – மு.க. அழகிரியின் அதிரடித் திட்டம்

584

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, திமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் எப்படியும் இழந்த இடத்தை பிடிக்க அழகிரி தீவிரமாக இருகிறார்.

தமிழ் நாட்டை இரண்டாக பிரித்து மதுரையை தலைநகராக ஆக்கி அதற்கு தன்னை திமுக தலைவராக நியமிக்குமாறு தன் அப்பா கருணாநிதியை கேட்க அழகிரி முடிவு செய்துள்ளார் என அவருக்கு நெருக்கமான போஸ்டர் ஒட்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே கலைஞரின் ஆலோசனைப்படி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில், தமிழ் நாட்டை இரண்டாக பிரிப்பது குறித்தும், தனக்கு மதுரையை தலைமையிடமாக கொண்ட மாநிலத்தை ஒதுக்க முடியுமா என்பது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளார்.

கேலிச்சித்திரம் நன்றி: கார்டூனிஸ்ட் பாலா
கேலிச்சித்திரம் நன்றி: கார்டூனிஸ்ட் பாலா

இதனை ஒட்டி தன் பிறந்த நாளன்று, தன் போஸ்டர் ஒட்டி ஆதரவாளர்களுடன் மதுரையிலிருந்து டெல்லி வரை   நடைப்பயணமாகச்  சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதற்கு ‘எனக்கு நானே’ நெடுந்தூர நடைப்பயணம் என்றும் பெயரிட்டுள்ளார். டெல்லி செல்லும் வழியில் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து, தந்தை கருணாநிதி மற்றும் தாயார் தயாளுவிடம் ஆசி பெற அழகிரி திட்டமிட்டுள்ளார். வழக்கம் போல்  ஸ்டாலின் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

There are no comments yet