இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழல் நாடுகள் பட்டியலில் 76-வது இடத்தில் இந்தியா இருப்பதற்கு நானும், என் குடும்பத்தினரும் மற்றும் கட்சியினரும் ஆற்றியிருக்கும் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் இந்தியா 76-வது இடத்தில் இருப்பதுதான் எனக்கு வருத்தமளிக்கிறது. இந்தியா எப்போதும் ஊழலில் முதலாவது இடத்தில் இருக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம் (அதாவது பட்டியலில் கடைசி இடத்தில்). அதற்கு கழக மற்றும் குடும்ப கண்மணிகள் அயராது உழைக்க வேண்டும். 2-G போதாது என நினைக்கிறேன். பீகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் டெல்லியில் சோனியா காங்கிரஸ் போன்ற கட்சிகள் போல் நமது திறமையை இன்னும் சிறப்போடு காண்பித்து இந்தியாவை எப்படியும் சோமாலியாவுக்கு நிகராகக் கொண்டுவர வேண்டும்.
ஒருவேளை, நான் முதல்வராக இருந்திருந்தால் இதெல்லாம் முன்பே சாத்தியமாக இருந்திருக்கும். அட் லீஸ்ட் வரும் தேர்தலிலாவது மக்கள் இதை எல்லாம் சிந்திக்க வேண்டும் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks