சென்னை: தான் நடத்தும் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து தன்னைத் தானே நீக்கி இன்று நடிகர் சரத் குமார் அறிவிப்பு வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. இது பற்றி கூறப்படுவதாவது. சமீபத்தில் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட 7 முக்கிய நிர்வாகிகள் பாரதீய ஜனதாவில் நேற்று இணைந்தனர். இது அக்கட்சியின் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று மாலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது:– சமத்துவ மக்கள் கட்சியில் தலைவர் பொறுப்பு வகித்து வந்த சரத்குமார் மற்றும் சிலர் அதிமுக கட்சியில் இணைந்ததாக செய்திகள் வந்துள்ளன. ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமையும் விருப்பமும் ஆகும். எனவே தலைவர் பதவியிலிருந்து சரத்குமாரை நீக்கி உத்தரவிடுகிறேன். இயக்கத் தோழர்கள் தலைவர் ஆர்.சரத்குமாரோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
சரத்குமாரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஒரு அரசியல் விமர்சகர் கூறும்போது, சரத் எப்பவுமே கொஞ்சம் வித்தியாசமானவர்தான், ஒருவேளை, கட்சியை சேர்ந்த மத்த நிர்வாகிகள் அதிமுகவில் சேர்வதற்கு முன்பு தானே சேர்ந்து விடலாம்னு நினைக்கிறார் போல என்றார்.
There are no comments yet
Or use one of these social networks