சென்னை: நாஞ்சில் சம்பத் மற்றும் பழ கருப்பையா விவகாரங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை தனது கட்சியினருக்கு நாவடக்கத்தை புதுமையாக அமல் செய்துள்ளது. இது குறித்து போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது. கடந்த சில வாரங்களாக அதிமுகவினருக்கு நேரம் சரியில்லை. கட்சியில் யாரவது எதாவது சொல்லி அம்மாவுக்கு இக்கட்டான நிலையை உண்டாக்கி வருகின்றனர். நாஞ்சில் சம்பத் ஆகட்டும் அல்லது பழ கருப்பையா ஆகட்டும் ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லி அம்மாவுக்கு டென்சனை உண்டு பண்ணி விடுகின்றனர். இதற்காக வரும் சட்ட மன்ற தேர்தல் முடியும் வரை அம்மா யாரையும் பேசக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதற்காக எங்கள் எல்லாரையும் வாய்க்கு பிளாஸ்திரி போட்டுக்கொள்ளவும் உத்திரவு வந்துள்ளது.
பல கோடிக்கணக்கில் பிளாஸ்திரிகள் அம்மா படத்துடன் அனைத்து மாவட்ட கழகங்களுக்கும் ஏற்கனவே அனுப்பப் பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் அம்மாவைத் தவிர அனைவரும் சைகையில் தான் பிரச்சாரம் செய்வார்கள். தேர்தலில் அதிமுக வெற்றி அடைந்தால் அடுத்து பொது மக்கள் வாய்க்கும் பிளாஸ்திரிதான் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks