நாலரை வருடம் ஆடு மேய்த்தேன், ஆட்சி முடியும் போது அறிவு வந்ததது – பழம் கிடைக்காத கருப்பையா கண்ணீர்

521
சென்னை: அடிமைகள் திமுக (அதிமுக) -வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பழம் கிடைக்காத கருப்பையா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:   நான் காமராஜkauppaiahர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களுடன் 40 வருடம் ஆடு மேய்த்த அரசியல்வாதி. கடந்த நாலரை வருடங்களாக  அதிமுகவில் ஆடு மேய்த்தேன்.  மற்ற சில அடிமைகள் மாதிரி அமைச்சர் ஆகி நல்ல ஜெர்சி மாடு மேய்க்க வாய்ப்பு கிடைக்கும் என நாலரை வருடம் காத்திருந்தேன். இது குறித்து அம்மாவை காண வேண்டும் என சில ஆடுகள் மூலம் தூது அனுப்பினேன்  ஆனால், அம்மாவை என்னால் நெருங்க முடியவில்லை. ஆடு மேய்க்கும்போது இருந்த என் பிரச்சினைகளைச் சொல்ல பல முறை முயற்சி செய்திருக்கிறேன் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
 
கடந்த நாலரை வருடங்களாக சாதிக்க முடியாததால், எனக்கு மீண்டும் அதிமுகவில்  ஆடு மேய்க்கும் வாய்ப்பு இந்த தேர்தலில் கிடைப்பது சந்தேகமாக இருந்தது, அதனால் தான் வேறு ஏதேனும் கட்சியில் ஆடு அல்லது மாடு மேய்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணி இப்போது வாயை திறந்துள்ளேன் என்றார்.

There are no comments yet