நள்ளிரவு போராட்டத்திற்கு பிறகு, மாணவர்களுடன் நைட் ஷோ பார்த்த ராகுல்

324

ஐதராபாத்: ஐதராபாத் பல்கலை. மாணவர் தற்கொலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக காங். துணை தலைவர் ராகுல், நள்ளிரவில் போராட்டத்தில் குதித்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று டில்லியில் இருந்து விமானம் மூலம் வந்த காங். துணை தலைவர் ராகுல், திடீரென நள்ளிரவில் ஐதராபாத் பல்கலை. வளாகம் சென்று அங்கு போராட்டம் நடத்திவரும் மாணவர்களை சந்தித்து போராட்டத்தில் குதித்தார். அதன் பிறகு பெரும்பாலான மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களுடன் ‘க்யா கூல் ஹைன் ஹம்’ (நாங்க ரெம்ப கூலாக இருக்கோம், Kyaa Kool Hain Hum) என்ற ஹிந்தி படத்தை பார்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது கூறித்து ராகுல் கூறும்போது, ஸ்டூடண்ட்ஸ் கூட சேர்ந்து போராட்டம் பண்ணும் போது நானும் ஒரு ஸ்டுடண்ட் ஆகவே மாறிட்டேன். போராட்டத்துக்கு அப்புறம் சில மாணவர்கள் ‘மச்சி படத்துக்கு போலாம்ன்னு’ சொன்ன போது என்னால் மறுக்க முடியவில்லை. நான் இங்கு வந்ததுல ஒரு பிரயோஜனமான விஷயமே ‘க்யா கூல் ஹைன் ஹம்’ படம் பார்த்ததுதான், ரெம்ப கூலான படம் என்றார்.

There are no comments yet