சென்னை: அதிமுகவில் ‘சான்ஸ்’ கிடைக்காததால் திரைப்பட இயக்குனர் விசு நேற்று பா.ஜ., கட்சியில் இணைந்தார். இதையடுத்து, சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக பாஜகவில் இணையும் படலம் தொடர்கிறது. இன்று விசுவை தொடர்ந்து, ‘கிங் காங்’ மற்றும் தவக்களையும் பாஜக-வில் சேர்ந்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த போது விசு கூறியதாவது. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கும் பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா, அவர் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கும் பைத்தியக்கார டாக்டர்கிட்ட போய் வைத்தியம் பார்ப்பார்!? எனவே நம்ம டாக்டர் தமிழ் இ(ம்)சை சவுந்திரராஜன் இருக்கும் பாஜகவில் இணைந்ததை என் வாழ் நாள் சாதனையாக நினைக்கிறேன். இது தான் எனக்கும் நல்லது, தமிழ் நாட்டு மக்களுக்கும் நல்லது என்றார்.
மேலும் கோவை சரளா, கவுண்டமணி, மற்றும் செந்தில் போன்ற பிரபலங்களும் பாஜகவில் சேர இருப்பதாக டெல்லியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks