கொட்டாம்பட்டி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழ் நாட்டின் எந்த ஒரு முடிவையும் அவரே எடுப்பதும், எந்த ஒரு அரசு நிகழ்வையும் தானே முன்னின்று செய்வதும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் சென்னையை வரலாறு காணாத வெள்ளம் சூழ்ந்தபோது கூட தலைக்கணம் பிடித்த சில எதிர்க்கட்சிகள் முதல்வரின் உத்திரவுக்காக அதிகாரிகள் காத்திருந்ததால் தான் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதில் தாமதம் உண்டானதாகவும் அதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தன.
இந்நிலையில், இன்று கொட்டாம்பட்டி நகராட்சியில் வெகு நாட்களாக திறப்பு விழாவிற்காக காத்திருந்த ஒரு குடி நீர் குழாயை வீடியோ கான்பாரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா கையசைத்து திறந்து வைத்தார் என செய்திகள் கூறுகின்றன.
இது பற்றி ஒரு அதிமுக தொண்டர் கூறும் போது, தமிழ் நாட்டில் அம்மாவின் ஆணை இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. கன்றுக்குட்டிக்கு பெயர் வைப்பதிலிருந்து, அமைச்சர்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பது வரை அம்மாதான் எல்லாம் செய்வார். இதிலிருந்தே அம்மா எவ்வளவு பிஸியாக தமிழ் நாட்டுக்கு உழைக்கிறார் எனத் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks