புதுடெல்லி: 2- ஜி முறைகேடு விசாரணைக்காக திமுக எம்பி கனிமொழி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினார். நீதிமன்றத்திற்கு போகும் வழியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து, வர இருக்கிற தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் ‘’கள்ள ஓட்டைஅனுமதிக்க வேண்டும்’ என்று கோரி மனு கொடுத்தார்.
பின்னர் கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே திருமங்கலம்
பார்முலாவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது திமுக தான். கள்ள ஓட்டு என்றாலே எங்கள் குடும்பம் தான் அனைவரின் நினைவுக்கு வரும் அளவுக்கு வரலாறு படைத்தது எங்கள் சாதனை. இந்த சாதனையை 2-ஜி யை அங்கீகரித்த அளவுக்கு யாரும் அங்கீகரிக்கவில்லை. அது என் அண்ணன் ‘அடங்கா’ நெஞ்சன் அழகிரிக்கு இந்த மோடி அரசும், மேல் சாதி பத்திரிகைகளும் செய்த துரோகம். அண்ணனுக்கு நேர்ந்த அவமானத்தை போக்க கள்ள ஓட்டை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு மனு கொடுத்துள்ளேன். இப்போது நிலவும் அரசியல் சூழலிலும், மக்கள் இன்னும் எங்கள் குடும்பம் மீது கொண்டுள்ள வெறுப்பிற்கும் திருமங்கலம் பார்முலாவை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. தேர்தல் ஆணையர் கண்டிப்பாக எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks